குற்ற வழக்குகளின் புலன் விசாரணை தரத்தை மேம்படுத்த ஆர்.நட்ராஜ் தலைமையில் தனிக்குழு..!

share on:
Classic

குற்ற வழக்குகளின் புலன் விசாரணை தரத்தை மேம்படுத்துவது குறித்து பரிந்துரை வழங்க முன்னாள் காவல் ஆணையர் ஆர். நடராஜ் உள்ளிட்ட 5 பேர் அடங்கிய குழுவை அமைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி இருவர் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையில், 7 முதல் 10 ஆண்டுகளுக்கும் மேல் சிறை தண்டனை வழங்க கூடிய வழக்குகளின் எண்ணிக்கையை தாக்கல் செய்ய தமிழக டிஜிபிக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவிட்டு இருந்தார். 

இதுகுறித்து தமிழக காவல்துறை தாக்கல் செய்த அறிக்கையில், 2013-ஆம் ஆண்டை விட 2018-ஆம் ஆண்டில் குற்ற வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்றும் குற்றவாளிகளை குற்றவாளிகளாகவே வைத்திருப்பது வேதனையளிப்பதாகவும் நீதிபதி தெரிவித்தார். 

குற்ற வழக்குகளின் புலன் விசாரணை தரத்தை மேம்படுத்துவது குறித்தும், குற்றவாளியின் சீர்திருத்தம் மற்றும் மறுவாழ்வுக்கு தேவையான நடைமுறைகளை கண்டறியவும் பரிந்துரை வழங்க முன்னாள் காவல் ஆணையர் ஆர். நடராஜ் உள்ளிட்ட 5 பேர் அடங்கிய குழுவை அமைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 8 வாரங்களில் அந்த குழு அறிக்கை அளிக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது

News Counter: 
100
Loading...

Ragavan