தமிழகத்துக்கான முதலீடுகளை ஈர்க்க தனி சிறப்புப் பிரிவுகள்..!

share on:
Classic

தமிழகத்துக்கான அந்நிய முதலீடுகளை ஈர்ப்பதற்காக தனி சிறப்புப் பிரிவுகள் தொடங்கப்படும் என முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவை விதி எண் 110-ன் கீழ் அறிக்கை தாக்கல் செய்து உரையாற்றிய முதலமைச்சர் பழனிசாமி, உலகெங்கும் உள்ள தமிழ் மக்கள், தமிழ் சங்கங்கள், தொழில் அமைப்புகளுடன் தொடர்பு ஏற்படுத்தி முதலீட்டு தூதுவர்கள் உருவாக்கப்படுவார்கள் என தெரிவித்தார். தமிழகத்தில் முதலீடு செய்வது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தவும், முதலீடுகளை ஈர்க்கவும், யாதும் ஊரே என்ற தனி சிறப்புப் பிரிவு மற்றும் இணையதளம் உருவாக்கப்படும் என குறிப்பிட்டார். தொழில் தொடங்க முன்வரும் முதலீட்டாளர்களை, வல்லுநர்களைக் கொண்டு அடையாளம் காணவும், ஜப்பான், தென் கொரியா, அமெரிக்கா போன்ற நாடுகளுக்கென தனித்தனியாக சிறப்பு அமைவுகள், அமைக்கப்படும் என்றும் தெரிவித்தார். டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் தொழில் வழிகாட்டி நிறுவனத்தின் புதிய பிரிவு தொடங்கப்படும் என முதலமைச்சர் அறிவித்தார்.

News Counter: 
100
Loading...

Ragavan