Spider-Man: Far From Home படத்தின் தமிழ் டிரைலர் வெளியீடு..!!

share on:
Classic

Spider-Man: Far From Home படத்தின் தமிழ் டிரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

சூப்பர் ஹீரோ படங்களின் தாயகமான மார்வெல் நிறுவனத்தின் பிரம்மாண்ட தயாரிப்பில் இப்போது உருவாகியுள்ள படம் தான் ஸ்பைடர்மேன். பேர் பிரம் ஹோம் அவென்ஞ்சர்ஸ் எண்ட் கேம் படத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து உருவாகும் இந்த படம் கடந்த 2017 ல் வெளியான ஸ்பைடர் மேன் படத்தின் தொடர்ச்சியாக உருவாகியுள்ளது.  இந்த ஸ்பைடர் மேன் பேர் பிரம் ஹோம் படம் வரும் ஜூலை 2 ஆம் தேதி வெளியாகியுள்ளது. 

ஜான் வாட்ஸ் இயக்கியுள்ள இந்த ஸ்பைடர் மேன் பேர் பிரம் ஹோம் படம் மார்வெல் சினிமாட்டிக் யூனிவெர்ஸ் தயாரித்துள்ள 23 வது படம். டாம் ஹாலண்ட் இந்த படத்திலும் பீட்டர் பார்க்கர் வேடத்தில் நடித்துள்ளார்.  பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இந்த ஸ்பைடர் மேன் பேர் பிரம் ஹோம் படத்தின் இரண்டாவது டிரைலர் கடந்த மாதம் வெளியாகி அனைத்து விதமான ரசிகர்களையும் திருப்தி படுத்திருந்த நிலையில் இப்போது இந்த படத்தின் தமிழ் டிரைலர் வெளியாகியுள்ளது. மேலும் ஸ்பைடர் மேன் பேர் பிரம் ஹோம் படம் வரும் ஜூலை மாதம் 2-ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது.

News Counter: 
100
Loading...

Thaamarai Kannan