'Spider Man' Far from home படத்தின் டிரெய்லர் வெளியீடு..!

share on:
Classic

ஸ்பைடர் மேன் ஃபார் ஃபரம் ஹோம்(Far From Home) திரைப்படத்தின் டிரெய்லர்  வெளியாகியுள்ளது. 

ஸ்பைடர் மேன் ஃபார் ஃபரம் ஹோம் படத்தின் டிரெய்லரை மார்வெல் சினிமேட்டிக் யுனிவர்ஸ் வெளியிட்டுள்ளது. இப்படம் ஜூலை 2-ம் தேதி வெளியாகவிருக்கிறது. ஜான் வாட்ஸ் இயக்கியுள்ள இப்படத்திற்கு ஜியாக்கினோ இசையமைத்துள்ளார். சுமார் 3 நிமிடங்களை கொண்ட இந்த டிரெய்லர் அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் படத்தின் தொடர்ச்சியாக இருக்கும் என கருதப்படுகிறது. இந்த டிரெய்லரில், தனது வழிக்காட்டியான டோனி ஸ்டார்க் (Iron Man) இறந்த துயரத்தில் இருக்கும் ஸ்பைடர் மேன், தனது நண்பர்களுடன் ஸ்கூல் ட்ரிப் சென்றுள்ளான். அப்போது, வேற்று உலகத்திலிருந்து வந்திருக்கும் மிஸ்டீரியோ என்பருடன் சேர்ந்து உலகை காக்க வேண்டுகோள் விடுகிறார் நிக் ஃப்யூரி.

எனவே, அவெஞ்சர்ஸில் தான் அணிந்த ஸ்பைடர் மேன் உடை இல்லாமல் எவ்வாறு அவரோடு இணைந்து, இந்தச் சவாலை எதிர்கொள்ளப்போகிறான் என்ற கதை களத்தை மையமாக கொண்டதாக இப்படம் இருக்கும் என எதிர்ப்படுகிறது. இந்த டிரெய்லர் வெளியான 2 மணி நேரத்தில் 4,61,0000 முறை பார்க்கப்பட்டுள்ளது. 

 

News Counter: 
100
Loading...

Ragavan