மனிதனின் வயிற்றில் இருந்த கத்தி, ஸ்பூன்கள் : அறுவைசிகிச்சை மூலம் அகற்றம்..

share on:
Classic

மனிதனின் வயற்றில் இருந்த ஸ்பூன்கள், கத்தி, ஸ்க்ரூ டிரைவர்கள் உள்ளிட்ட பொருட்கள் அறுவைசிகிச்சைக்கு பின் அகற்றப்பட்டன. 

8 ஸ்பூன்கள், 2 ஸ்க்ரூ டிரைவர்கள், இரண்டு பல்துலக்கும் பிரஷ்கள், சமையலுக்கு பயன்படும் கத்தி ஒன்று, கதவு தாழ்ப்பாள் இவையெல்லாம் பொருட்கள் வாங்குவதற்காக போடப்பட்ட பட்டியல் என்று நினைக்கிறீர்களா..? இல்லை, மேற்கூறிய பொருட்கள் எல்லாம் ஒரு மனிதனின் வயிற்றில் இருந்தவை என்றால் உங்களால் நம்ப முடிகிறாதா..? ஆம், ஹிமாச்சல் பிரதேசத்தில் உள்ள மண்டி பகுதியில் உள்ள கார்ன் சென் என்ற 35 வயதான நபர் தனது வயிறு வீக்கம் என்று கூறி அங்குள்ள கிளினிக் ஒன்றிற்கு சென்றுள்ளார். அவருக்கு வழங்கப்பட்ட முதற்கட்ட சிகிச்சைகளுக்கு பின்னர், அவரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற மருத்துவர்கள் அறிவுறுத்தினர்.

பின்னர் அவர், லால் பகதூர் சாஸ்திரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அங்கு எக்ஸ்ரே செய்யப்பட்ட போது அவரின் வயிற்றில் பல்வேறு பொருட்கள் இருந்தது தெரியவந்தது. மூன்று மருத்துவர்கள் அடங்கிய மருத்துவக்குழு, 4 மணி நேரம் அறுவை சிகிச்சை செய்த பின்னர் கார்ன் சென்னின் வயிற்றிலிருந்த பொருட்கள் அகற்றப்பட்டன. இது ஒரு அபூர்வமான சம்பவம் என்று கூறிய மருத்துவர்கள், அந்த நோயாளி மனநோய் பாதிப்பு இருப்பதாகவும் தெரிவித்தனர். தற்போது அவர் அபாயக்கட்டத்தை தாண்டிவிட்டதாக கூறிய மருத்துவர், கார்னின் உடல்நிலை தற்போது நிலையாக உள்ளதாகவும் தெரிவித்தார்.

News Counter: 
100
Loading...

Ramya