சீனாவில் வசூல் சாதனை படைத்து வரும் ஸ்ரீதேவியின் இறுதி திரைப்படம்..!

share on:
Classic

இந்திய சினிமாவின் மிகச் சிறந்த நடிகைகளில் ஒருவராக இருந்தவர் தான் மறைந்த நடிகை ஸ்ரீதேவி. இறுதியாக நடித்த மாம் படம் சீனாவில் வசூல் சாதனை படைத்துள்ளது.

தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, ஹிந்தி போன்ற மொழிகளில் பல வெற்றி படங்களில் நடிச்சிருக்க இவங்க கடைசியாக நடித்த படம் தான் மாம். அறிமுக இயக்குநர் ரவி உத்யவார் இயக்கிய இந்த ‘மாம்' படத்தின் மூலம் அவங்களோட சினிமா வாழ்க்கையில் மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்திருந்தாங்க, இவங்களோட இந்த கடின உழைப்பிற்கும் ஈடுஇணை இல்லாத நடிப்பிற்கும் சிறந்த நடிகைக்கான தேசிய விருதையும் மாம் படம் பெற்றுத் தந்தது.

ஸ்ரீ தேவியின் 300-வது திரைப்படமான மாம் படம் மிகச் சிறந்த விமர்சனங்களை பெற்றத்துடன் திரைத்துறையில் அவங்களோட 50-வது ஆண்டில் தைரியமான மற்றும் அசாதாரணமான கதையை தேர்ந்தெடுத்து நடித்ததற்கு மிகப்பெரிய பாராட்டுகளையும் பெற்றுத் தந்தது. கடந்த 2017-ஆம் ஆண்டு ஜூலை மாதம் 7-ஆம் தேதி இந்தியாவில் வெளியான இந்த மாம் படம் போலந்து, செக் குடியரசு, ரஷ்யா, அரபு நாடுகள், இங்கிலாந்து, அமெரிக்கா, சிங்கப்பூர் உள்ளிட்ட 39 நாடுகளில் அடுத்தடுத்து வெளியாகி அனைத்து விதமான ரசிகர்களையும் ரசிக்க வைத்தது.

வெளியான அனைத்து நாடுகளிலும் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்ற மாம் படம் கடந்த 10-ஆம் தேதி சீனாவிலும் வெளியாகியது. மேலும், முதல் நாளிலே சுமார் ரூ. 10 கோடி வசூல் செய்த இந்த மாம் படம் மூன்று நாட்களிலே ரூ. 41.34 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

News Counter: 
100
Loading...

Ragavan