இலங்கை பிரதமராக ராஜபக்சே தொடர இடைக்கால தடை

Classic

இலங்கை பிரதமராக நியமிக்கப்பட்ட ராஜபக்சேவும், அவரது அமைச்சர்களும் பதவிகளில் தொடர நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

இலங்கையில் பிரதமராக இருந்த ரனில் விக்கிரமசிங்கேவை பதிவிநீக்கம் செய்த அதிபர் சிறிசேனா அவருக்கு பதிலாக முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவை பிரதமராக நியமித்தார்.

ஆனால் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் 2 முறை கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தில் ராஜபக்சே பெரும்பான்மையை நிரூபிக்கவில்லை. இருப்பினும் அவரை பிரதமர் பதவியிலிருந்து சிறிசேனா நீக்காமல் இருந்து வருகிறார்.

இந்த நிலையில் ராஜபக்‌சேவை பிரதமராக செயல்பட தடை விதிக்கக்கோரி மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. நேற்று வழக்கை விசாரித்த நீதிமன்றம், ராஜபக்சே பிரதமராக செயல்பட இடைக்காலத்தடை விதித்து தீர்ப்பளித்தது. அத்துடன் ராஜபக்‌ஷே அரசின் கீழ் இயங்கும் அமைச்சர்கள் தங்கள் பதவிகளில் தொடர சட்டத்தில் அனுமதி இல்லை என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

News Counter: 
100
Loading...

sasikanth