இலங்கை : சுற்றுலா பயணிகளுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க சிறிசேனா கோரிக்கை

share on:
Classic

இலங்கையில் தேசிய பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்குமாறு வெளிநாட்டுத் தூதுவர்களிடம் அதிபர் சிறிசேனா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

வெளிநாட்டுத் தூதுவர்கள், உயரதிகாரிகள் மற்றும் ஐக்கிய நாடுகள் சபை பிரதிநிதிகள் ஆகியோருடன் அதிபர் சிறிசேனா ஆலோசனை நடத்தினார். அப்போது, கடந்த 2 வாரங்களாக இலங்கை பாதுகாப்புத் துறையினர் பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளை வெற்றிகரமாக முன்னெடுத்து வருதாதவும், தேசிய பாதுகாப்பு தொடர்பில் அரசாங்கம் மேற்கொண்ட தீர்மானங்களும் சாதகமான முறையில் அமைந்துள்ளதாக சிறிசேனா தெரிவித்தார். தேசிய பாதுகாப்பு தற்போது உறுதிசெய்யப்பட்டுள்ளதால், இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள தடைகளை நீக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். கல்வி நிறுவனங்கள், அரசு நிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள் கூடும் இடங்களில் பாதுகாப்பு உறுதி செய்வதற்கு காவல்துறையுடன், முப்படையினர் இணைந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருவதாகவும் அதிபர் சிறிசேனா தெரிவித்துள்ளார்.

News Counter: 
100
Loading...

Ragavan