'தல' படத்தில் அறிமுகமாகும் ஸ்ரீதேவியின் மகள் 'ஜான்வி'...!!

share on:
Classic

இந்தியில் வெளியாகி, வெற்றிபெற்ற 'பிங்க்' திரைப்படத்தின் ரீமேக் தான் அஜித்தின் 59-வது படமாக இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை இயக்குனர் 'வினோத்' இயக்க, இந்தி தயாரிப்பாளர் 'போனி கபூர்' தயாரிக்கிறார். இந்த படத்தில் ஸ்ரீதேவியின் மகள் 'ஜான்வி' தற்போது இணைந்துள்ளார்.

ஹிந்தியில் 'அமிதாப் பச்சன்' நடிப்பில் வெளியாகி தேசிய விருது உட்பட பல விருதுகளை அள்ளிக்குவித்த படம் 'பிங்க்'. இதில், டாப்ஸி மற்றும் பல நடிகர்கள் நடித்திருந்தனர். இந்த படத்தில் அமிதாப் பச்சன் வழக்கறிஞராக நடித்திருந்தார். ஒரு பிரச்சனையில் மாட்டிக்கொள்ளும் மூன்று பெண்கள், அவர்களுக்கு உதவும் ஒரு வயதான வழக்கறிஞர் என்ற அடிப்படையில் இந்த கதை நகரும். இது சமூக மாற்றத்திற்கான படம் என்று ரசிகர்களும், விமர்சகர்களும் ஒருசேர இந்த படத்தை கொண்டாடி தீர்த்தனர்.

தற்போது இந்த படத்தின் ரீமேக்கில் தான் 'தல' அஜித் நடிக்கவிருக்கிறார். இயக்குனர் பாரதிராஜாவின் '16 வயதினிலே' படத்தில் அறிமுகமாகி 1980-களின் தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறந்தவர் நடிகை ஸ்ரீதேவி. இவர் கடந்த வருடம் மாரடைப்பால் உயிரிழந்தார். இந்நிலையில், அவரது மகள் ஜான்வி கபூர் ஹிந்தியில் 'தடக்' என்ற படத்தில் அறிமுகமானார். ஆனால் அந்த படம் சொல்லிக்கொள்ளும்படி ஓடவில்லை. அதனால் ஜான்வியை தமிழில் நடிக்க வேண்டும் என்று அவரது தந்தையும் ஸ்ரீதேவியின் கணவருமான போனி கபூர் முயற்சித்து வந்தார். அதுவே ஸ்ரீதேவியின் நீண்ட நாள் ஆசை மற்றும் கனவு என்றும் கூறி வந்தார்.

சரியான நேரத்திற்காக காத்திருந்த போனி கபூர், இந்த படத்தில் அஜித்துக்கு ஒரு மகள் இருப்பது போல், ஒரு கதாபாத்திரத்தை உருவாக்கி, அதில் ஜான்வியை நடிக்க வைக்க பேசினார் என்று கூறப்படுகிறது. இயக்குனர் வினோத்தும் இதற்கு ஓகே சொல்ல, அஜித் படத்தில் ஜான்வி நடிப்பது உறுதியாகி விட்டது. பொறுத்திருந்து பார்ப்போம், தமிழ் சினிமாவில் ஸ்ரீதேவியின் அடைய முடியாத உயரத்தை அவரது மகள் ஜான்வி அடைவாரா என்று !

 

News Counter: 
100
Loading...

vinoth