இலங்கை தாக்குதல் : அனுமதியின்றி நுழைந்ததாக செய்தியாளர் கைது..!!

share on:
Classic

இலங்கை குண்டுவெடிப்பின் பாதிப்புகளை பதிவு செய்ய இலங்கை சென்ற இந்தியாவில் வேலை செய்யும் புகைப்பட பத்திரிகையாளர் கைது செய்யப்பட்டுள்ளார். 

ராய்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்காக டெல்லியில் பணிபுரியும் சித்திக் அகமது டானிஷ் என்ற புகைப்பட செய்தியாளர், இலங்கை தொடர்குண்டுவெடிப்புகளின் பாதிப்புகளை பதிவு செய்ய அங்கு சென்றுள்ளார். அங்குள்ள நெகொம்போ நகரில் உள்ள பள்ளியில் அனுமதியில்லாமல் நுழைந்ததாக அவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். பின்னர் மாஜிஸ்திரேட் முன்னால் ஆஜர்படுத்தப்பட்ட அவருக்கு மே 15 வரை காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். இலங்கை செயிண்ட் செபாஸ்டியன் தேவாலயத்தில் நடைபெற்ற குண்டுவெடிப்பில் உயிரிழந்த மாணவரின் பெற்றோர், நெகம்போ பள்ளியில் இருப்பதால், அவர்களிடம் தகவல்களை பெற செய்தியாளர் பள்ளிக்குள் நுழைய முயன்றதாக இலங்கை ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 
 

News Counter: 
100
Loading...

Ramya