இலங்கையில் தாக்குதல் நடத்தியவர்கள் பயிற்சிக்காக காஷ்மீர் வந்ததாக தகவல்..

share on:
Classic

இலங்கையில் தாக்குதல் நடத்தியவர்கள் பயிற்சிக்காக காஷ்மீர் வந்ததாக அந்நாட்டின் ராணுவம் தெரிவித்துள்ளது. 

இது தொடர்பாக பிபிசி ஆங்கில செய்திக்கு இலங்கை ராணுவ லெப்டினெண்ட் ஜெனரல் மகேஷ் சேனநாயகே பேசினார். அப்போது பேசிய அவர் “ இலங்கையில் தாக்குதல் நடத்தியவர்கள் இந்தியாவின் பெங்களூரு, காஷ்மீர் மற்றும் கேரளா ஆகிய பகுதிகளுக்கு வந்து பார்வையிட்டனர்” என்று தெரிவித்தார். எதற்காக அவர்கள் இந்தியா வந்தனர் என்ற கேள்விக்கு “ சில பயற்சிகளுக்காகவோ அல்லது நாட்டிற்கு வெளியே உள்ள அமைப்புக்களுடன் தங்கள் தொடர்புகளை விரிவுப்படுத்தவோ வந்திருக்கலாம்” என்று தெரிவித்தார். எனினும் அவர்கள் காஷ்மீருக்கு வந்து பயிற்சி எடுத்தது குறித்து இந்திய அதிகாரிகள் இதுவரை எந்த கருத்தையும் குறிப்பிடவில்லை.

இதனிடையே, கடந்த 2017-ம் ஆண்டு இலங்கையில் தாக்குதல் நடத்திய தற்கொலைப்படையினரில் 2 பேராவது இந்தியாவுக்கு வந்திருக்கூடும் என உளவுத்துறை அதிகாரிகள் கூறியதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. 

News Counter: 
100
Loading...

Ramya