உலகக்கோப்பை : இலங்கைக்கு அதிர்ஷ்டம்... காரணம் இதுதான்....!

share on:
Classic

12-வது உலகக்கோப்பை இங்கிலாந்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் இரண்டு ஆட்டங்கள் மழையினால் ரத்து செய்யப்பட்டதால் இலங்கை அணிக்கு 2 புள்ளிகள் பரிசாக கிடைத்துள்ளது ....

நடந்து வரும் உலகக்கோப்பை தொடரில் இன்று வங்க தேசம், இலங்கை அணிகளுக்கு இடையே லீக் போட்டி நடைபெற இருந்த நிலையில் மைதானத்தில் தொடர்ச்சியாக மழை பெய்த காரணத்தால் ஆட்டம் ரத்து செய்யப்பட்டு இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி அளிக்கப்பட்டது. இதேபோல் இலங்கை அணி கடந்த 07 ஆம் தேதி கவுண்டி மைதானத்தில் பாகிஸ்தான் அணியுடன் மோத இருந்த நிலையில் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் ரத்து செய்யபட்டு இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி பகிர்ந்து அளிக்கபட்டது. இதனால் இலங்கை அணி இரண்டு போட்டிகளில் விளையாடாமலேயே 2 புள்ளிகளை பரிசாக பெற்றுள்ளது.

 

News Counter: 
100
Loading...

Saravanan