இலங்கையில் புது அரசாங்கத்தினால் நாடு முழுவதும் ஆபத்து: எம்.பி சஜித் பிரேமதாஸ

share on:
Classic

நீதிக்கு விரோதமான முறையில் உருவாக்கப்பட்டுள்ள புதிய அரசாங்கத்தினால் முழு நாடும் ஆபத்துக்குள்ளாகி இருப்பதாக இலங்கையின் ஐக்கிய தேசிய கட்சி எம்.பி சஜித் பிரேமதாஸ ஆதங்கம் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், அரசியலமைப்பினை முழுமையாக மீறி நாட்டின் ஜனநாயக செயற்திட்டம் கால்களால் எட்டி உதைக்கப்பட்டிருப்பதாகவும், இதன் மூலம் நீதிக்கு விரோதமான முறையில் முழு நாடும் ஏற்காத ஒரு அரசாங்கம் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

அதிபரின் இந்த செயல்பாட்டால் மேலை நாடுகளிலிருந்து இலங்கைக்கு கிடைக்கும் ஆதரவுகள் இடைநிறுத்தப்படும் என்றும் தெரிவித்தார். மேலும், வரும் 14ஆம் தேதிக்கு முன்னராக நாடாளுமன்றம் கூட்டப்பட்டு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

News Counter: 
100
Loading...

vijay