close
முகப்புஶ்ரீவில்லிபுத்தூர்: வன்னியம்பட்டி, மம்சாபுரம் மல்லி ஆகிய பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை

ஶ்ரீவில்லிபுத்தூர்: வன்னியம்பட்டி, மம்சாபுரம் மல்லி ஆகிய பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை

ஶ்ரீவில்லிபுத்தூர்:  வன்னியம்பட்டி, மம்சாபுரம் மல்லி  ஆகிய பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை

ஶ்ரீவில்லிபுத்தூர் அதன் சுற்று வட்டார பகுதியான வத்ராப் வன்னியம்பட்டி, மம்சாபுரம் மல்லி  ஆகிய பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்ததால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் கடந்த 1 மாத காலமாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வந்தது.  இந்நிலையில் வழக்கத்தை விட மாறாக வெயில் அதிகமாக காணப்பட்டது. மாலை திடீரென இடி மின்னல் உடன் கூடிய மழை பெய்ததால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் ஸ்ரீவில்லிபுத்தூர் அதன் சுற்று வட்டார பகுதியான வத்ராப், கூமாபட்டி, மல்லி கான்சாபுரம், வண்ணியம்பட்டி பகுதிளிகளும் தொடர்ந்து மழை பெய்தது. மேலும்  ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் பகுதி முழுவதும் சுமார் 1 மணி நேரத்திற்க்கும் மேலாக பெய்த கன மழையால் ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்