4 தொகுதி இடைத்தேர்தல் குறித்து ஸ்டாலின் ஆலோசனை..!

share on:
Classic

4 தொகுதி இடைத்தேர்தல் பொறுப்பாளர்களுடன் திமுக தலைவர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.

திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம், சூலூர், அரவக்குறிச்சி ஆகிய 4 தொகுதிகளுக்கான சட்டமன்ற இடைத்தேர்தல் மே 19-ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில், 4 தொகுதிகளுக்கான தேர்தல் பொறுப்பாளர்களுடன் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்று வரும் இந்த கூட்டத்தில், துரைமுருகன், கனிமொழி, ஐ.பெரியசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர். 4 தொகுதி நிலவரம் மற்றும் தேர்தல் பிரசாரம் குறித்து தேர்தல் பொறுப்பாளர்களுடன் ஸ்டாலின் ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனிடையே, 4 தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலை முன்னிட்டு திமுக தலைவர் ஸ்டாலின் பிரசாரம் மேற்கொள்ள உள்ள தேதிகள் வெளியாகியுள்ளன. அதன்படி மே 1 மற்றும் 2-ஆம் தேதிகளில் ஒட்டப்பிடாரம் தனித் தொகுதியிலும், மே 3 மற்றும் 4-ஆம் தேதிகளில் திருப்பரங்குன்றம் தொகுதியிலும் பிரசாரம் மேற்கொள்ளவிருக்கிறார்.

மேலும், மே 5 மற்றும் 6-ஆம் தேதிகளில் சூலூர் தொகுதியிலும், மே 7 மற்றும் 8-ஆம் தேதிகளில் அரவக்குறிச்சி தொகுதியிலும் தனது பிரசார சுற்றுப்பயணத்தை மேற்கொள்ள உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

News Counter: 
100
Loading...

Ragavan