இலங்கையை உலுக்கிய குண்டுவெடிப்பு சம்பவங்களுக்கு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்..!!

share on:
Classic

இலங்கையை உலுக்கிய குண்டுவெடிப்பு சம்பவங்களுக்கு தி.மு.க. தலைவர்  மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக  அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘இலங்கையில் நிகழ்ந்துள்ள குண்டுவெடிப்பு சம்பவங்களும், உயிர்ப்பலிகளும் இதயத்தை நொறுக்குவதாகவும்,  இதன் பின்னணியில் உள்ள மதவெறி, இனவெறி உள்ளிட்ட எந்தவிதமான சக்திகளாக இருந்தாலும் அடையாளம் கண்டு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார். மனிதநேயத்திற்கு விடப்பட்ட சவாலை மனிதாபிமான சக்திகள் முறியடிக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

News Counter: 
100
Loading...

vinoth