விரக்தியின் உச்சத்தில் இருக்கிறார் மு.க. ஸ்டாலின் - தொழில்துறை அமைச்சர் எம்.சி. சம்பத் விமர்சனம்

share on:
Classic

தமிழகத்தில் நடத்தி முடிக்கப்பட்ட 2வது உலக முதலீட்டாளர்கள் மாநாடு குறித்த திமுக தலைவரின் பேச்சு விரக்தியின் உச்சத்தில் அவர் இருப்பதை பிரதபலிப்பதாக தொழில்துறை அமைச்சர் எம்.சி. சம்பத் விமர்சித்துள்ளார். 

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2வது உலக முதலீட்டாளர்கள் வெற்றிகரமாக நடத்தப்பட்டதை பொறுத்துக்கொள்ள முடியாத ஸ்டாலின், சாலையில் சென்றவர்களை அழைத்து வந்து 
 மாநாட்டில் உட்கார வைத்ததாக பேசியுள்ளது ஸ்டாலின் விரக்தியின் உச்சத்திற்கு சென்றுள்ளதையே காட்டுகிறது என  குறிப்பிட்டுள்ளார்.  தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சியில் பெரும் பங்கு வகிக்கும் உலக புகழ் பெற்ற தொழிற்துறையினரை சாலையில் சென்றவர்கள் என ஸ்டாலின் கூறியுள்ளது அவரது அறியாமையையே காட்டுகிறது என எம்.சி. சம்பத் சுட்டி காட்டியுள்ளார். மாநாட்டில் கலந்துகொள்பவர்களுக்கு எவ்வித உடை கட்டுப்பாட்டும் விதிக்கப்பட்வில்லை என்று சுட்டிகாட்டிய அமைச்சர் சம்பத், வேட்டி கட்டி பாரம்பரிய உடையணிந்து பலரும் மாநாட்டில் கலந்துகொண்டதாக தெரிவித்துள்ளார். ஆனால் கோட் அணிந்தவர்கள் மட்டுமே தொழிலதிபர்கள் என்பதை போல் ஸ்டாலின் பேசியது தொழில் முனைவோரை கொச்சைப்படுத்தும் செயல் என்று எம்.சி.சம்பத் குற்றம்சாட்டியுள்ளார்.நடைபெற்ற தொழில் முனைவோர் மாநாட்டில் தொழில் முனைவோர் அறிவித்துள்ள 3 லட்சத்து 431 கோடி ரூபாய் அளவிலான புதிய முதலீடுகள் அதிமுக அரசின் சாதனைக்கு சான்றாக அமைந்துள்ளதாக தெரிவித்துள்ளார். இதனை பொறுத்துக்கொள்ள முடியாமல் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக முதலீட்டாளர்கள் மீது அவதூறு பரப்புவதை ஸ்டாலின் நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

News Counter: 
100
Loading...

aravind