உள்ளாட்சி தேர்தலை நடத்த அரசு முன்வருமா ? - ஸ்டாலின் கேள்வி

share on:
Classic

உள்ளாட்சி தேர்தலை விரைவாக நடத்த அரசு முன்வருமா என்று ஸ்டாலின் கேள்வி எழுப்பிய நிலையில், காங்கிரஸ் உறுப்பினர் சார்பில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது. 

பேரவையில் பேசிய திமுக தலைவர் ஸ்டாலின், உள்ளாட்சி அமைப்புகளுக்கு 3 ஆண்டுகளாக தேர்தல் நடத்தப்படதாதால் செயலாக்க நிதி விடுவிக்கப்படவில்லை என்று கூறியதோடு, தேர்தலை நடத்த அரசு முன்வருமா என கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் எஸ்பி வேலுமணி, 22 ஆண்டுகளுக்கு பிறகு வார்டு வரையறை முடிக்கப்பட்டுள்ளது என்றும், உள்ளாட்சி தேர்தலை நடத்த அரசு தயாராக இருப்பதாகவும் குறிப்பிட்டார். 

மேலும், உள்ளாட்சி தேர்தல் குறித்த வழக்கு நிலுவையில் உள்ளதால் மத்திய அரசு நிதி ஒதுக்குவதில் தாமதம் ஏற்படுவதாகவும் வேலுமணி குறிப்பிட்டார். அதனை தொடர்ந்து காங்கிரஸ் சட்டப்பேரவை தலைவர் ராமசாமி உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார்.

 

News Counter: 
100
Loading...

aravind