”மேகதாது அணை கட்டும் முயற்சியை கர்நாடகா கைவிட வேண்டும்”

share on:
Classic

மேகதாது அணை கட்டும் முயற்சியை கர்நாடக அரசு கைவிட வேண்டும் என  திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், காவிரி இறுதித் தீர்ப்பின் அடிப்படையில், தமிழகத்திற்கு தண்ணீரைத் திறந்துவிட வேண்டிய கர்நாடக அரசு, மேகதாது அணை கட்டினால் தான் தண்ணீர் திறந்துவிட முடியும் என்று கூறுவது  வேடிக்கையானது என தெரிவித்துள்ளார். தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்துடன்  விளையாடும் விபரீத முயற்சி என்றும், கதாதுவில் புதிய அணை கட்டும் முடிவை கர்நாடக அரசு கைவிட வேண்டும் என்றும் வலியுறுத்தினார். மேலும் கர்நாடக அரசின் கடிதத்தை நிராகரித்து, "மேகதாது அணை கட்டுவதற்கு சுற்றுப்புறச் சூழல் அனுமதியைக் கொடுக்க முடியாது" என்று மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என்றும் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

 

News Counter: 
100
Loading...

aravind