நீட் விலக்கிற்கான மசோதாவுக்கு மோடி ஒப்புதல் பெறுவாரா..? ஸ்டாலின் காட்டம்..!

share on:
Classic

தேர்தல் சுயலாபத்திற்காக வாக்குறுதிகளை அள்ளி விடும் பிரதமர் மோடி, நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கும் தமிழக மசோதாவுக்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலை பெற்றுத் தருவாரா என திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கிராமப்புற மக்களைக் காப்பாற்றுவதற்குக் கூட மருத்துவர்கள் இல்லாத பேரபாயம் தமிழ்நாட்டிற்கு ஏற்பட்டுள்ளது என்றும், தமிழ்நாட்டின் சுகாதாரக் கட்டமைப்பே ஒட்டுமொத்தமாகச் சரிந்து விழும் மிகப்பெரிய ஆபத்தை “நீட் தேர்வு” ஏற்படுத்தியுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார். தேர்தல் காலத்தில் சுய ஆதாயத்திற்காக எத்தனையோ அறிவிப்புகளை வெளியிடும் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, மாணவர்கள் நலன் கருதி, “நீட் தேர்விலிருந்து” விலக்களிக்கும் தமிழ்நாடு சட்டமன்றத்தின் மசோதாவிற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதலைப் பெற வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். 

நாடாளுமன்றத் தேர்தலுக்கு பா.ஜ.க.வுடன் கூட்டணி வைக்க தயாராகிக் கொண்டிருக்கும் முதலமைச்சர் பழனிசாமி, இப்போதாவது நீட் மசோதாக்களுக்கு ஒப்புதலை அளிக்க வேண்டும் என்பதை கூட்டணிக்கான நிபந்தனையாக முன்வைத்து, மத்திய பா.ஜ.க. அரசை வலியுறுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

 

News Counter: 
100
Loading...

aravind