தமிழகத்தின் உரிமைகளை டெல்லியில் அடகு வைத்துவிட்டு திரும்பியுள்ளார் முதலமைச்சர் பழனிசாமி..!!

share on:
Classic

தமிழகத்தின் உரிமைகளை டெல்லியில் அடகு வைத்துவிட்டு திரும்பியுள்ள முதலமைச்சர் பழனிசாமியை மக்கள் மன்னிக்க மாட்டார்கள் என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் முதலமைச்சர் பழனிசாமியின் செயல்பாடுகளை விமர்சித்து ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், தண்ணீரின்றி தமிழக மக்கள் தவித்து வரும் நிலையில், ஆக்கப்பூர்வமான திட்டங்களை கேட்டுப் பெறாமல், கட்சியின் சொந்த பஞ்சாயத்தை மட்டும் பேசிவிட்டு திரும்பியிருப்பதாக ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். ஏற்கனவே கொடுத்த கோரிக்கை மனுவை சற்று வெட்டி ஒட்டி மீண்டும் பிரதமர் மோடியிடம் அளித்திருப்பதாக அவர் விமர்சித்துள்ளார். சுமார் 17 ஆயிரத்து 350 கோடி ரூபாய் நிதியை தமிழகத்திற்கு வழங்காமல் மத்திய அரசு தொடர்ந்து வஞ்சித்து வருவதாகவும், நீட் தேர்வால் தமிழக மாணவர்களின் உயிரிழப்புகள் தொடர்வதாகவும், மேகதாது விவகாரம் என பல்வேறு பிரச்சனைகளை சுட்டிக்காட்டியுள்ள ஸ்டாலின், முதலமைச்சர் கொடுத்த மனு “அலட்சியங்களின்” ஒட்டு மொத்த “அலங்காரமாக” இருப்பதாக குற்றம்சாட்டியுள்ளார். தமிழக மக்களின் உணர்வுகளை நிதி அயோக் கூட்டத்தில் முறைப்படி எதிரொலிக்காமல், அடகு வைத்துவிட்டு வந்துள்ளதாக  ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

News Counter: 
100
Loading...

vinoth