"விழிப்புடன் செயல்பட வேண்டும்"

share on:
Classic

திமுக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் விழிப்புடன் செயல்பட்டு வாக்குப்பதிவு இயந்திரங்களை பாதுகாக்க வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மதுரையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள மையத்திற்குள் தாசில்தார் உள்ளிட்ட சிலர் நுழைந்து சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டதாக செய்திகள் வெளியானதை சுட்டிக்காட்டியுள்ளார். தேர்தல் ஜனநாயகம் தற்போதுள்ள மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சியில் உள்ளவர்களின் அத்துமீறல்களுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கும் வகையில் இருக்கிறது என குற்றம்சாட்டியுள்ளார். துணை ராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் இருக்கும் வாக்குப்பதிவு இயந்திரங்களை தேர்தல் ஆணையம் பாதுகாக்காதது கண்டனத்திற்குறியது என கூறியுள்ள அவர், தேர்தல் அதிகாரிகள்  ஆளும் கட்சியின் கைப்பாவைகளாக ஒட்டுமொத்தமாக மாறி இருப்பது தேர்தல் ஜனநாயகதை சீர்குலைத்து - நேர்மையான தேர்தலுக்கு பேராபத்தை ஏற்படுத்தி உள்ளது என தெரிவித்துள்ளார். வாக்கு எண்ணும் மையங்களில் திமுக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் இரவு பகல் பாராமல், விழிப்புடன் செயல்பட்டு வாக்குப்பதிவு இயந்திரங்களை பாதுகாக்க வேண்டும் என்றும் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

News Counter: 
100
Loading...

vinoth