சேனல்களில் இனி தடையில்லா ஒளிபரப்பு கட்டாயம் - TRAI தலைவர் RS சர்மா..!

Classic

தொலைக்காட்சி சேனல்களுக்கான புதிய கட்டண விதிமுறைகள் கடந்த வாரம் அறிவிக்கபட்டுள்ள  நிலையில், சேனல் ஒளிபரப்பு நிறுவனங்கள் கேபிள் மற்றும் DTH ஆபரேட்டர்களுடன்  இணைந்து தடையற்ற ஒளிபரப்பை கட்டாயம் அளிக்க வேண்டும் என்று, இந்தியாவின் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான 'TRAI' தலைவர் RS சர்மா கூறியுள்ளார்.

டெல்லியில் நடைபெற்ற கூட்டத்தில் சேனல் நிறுவனங்கள், கேபிள் ஆபரேட்டர்களை விட வாடிக்கையாளர்களுக்கே அதிக முக்கியத்துவம் கொடுத்து பேசப்பட்டது. இந்த புதிய கட்டண விதிமுறைகள் குறித்து பல சேனல்களே தெளிவில்லாமல் இருக்கும் நிலையில், இது வாடிக்கையாளர்கள் தங்களது கட்டண செலவுகளை தாங்களே வழிவகுத்துக்கொள்ள கூடியதாக இருக்கும் என்பதால், இதை செயல்படுத்த TRAI துரிதமாக முயன்று வருகிறது. முன்னணி நிறுவனங்களான சோனி, ஸ்டார், ஜீ குழுமங்கள் ஏற்கனவே இதை நடைமுறைப்படுத்த ஆரம்பித்துவிட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

News Counter: 
100
Loading...

youtube