எங்கள் எந்த கிளையில் இருந்தும் தகவல்களை எடுக்க முடியாது : பாரத ஸ்டேட் வங்கி

share on:
Classic

வாடிக்கையாளர்கள் விவரம் பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதாக எழுந்த புகாருக்கு பாரத ஸ்டேட் வங்கி மறுப்பு தெரிவித்துள்ளது

அமெரிக்காவைச் சேர்ந்த டெக்கிரன்ச் என்ற நிறுவனம் எஸ்பிஐ வங்கி சர்வரில் பதிவான வாடிக்கையாளர்களின் தகவல்களை பார்க்க முடிவதாகவும், பாஸ்வேர்ட் இல்லாத கணக்காளர்களின் பெயர்கள், தொலைபேசி எண்கள், வங்கிக் கணக்கு இருப்பு விவரம், பணப்பரிவர்த்தனை குறித்த தகவல்கள் பாதுகாப்பு இல்லாத நிலையில் இருப்பதாக கூறியது. இதுகுறித்து எஸ்பிஐ வங்கி நிர்வாகம் தனது டுவிட்டர் பக்கத்தில், டெக்கிடன்ச் கூறிய புகார் குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டதாக தெரிவித்துள்ளது. அதன்படி தங்கள் வங்கியின் எந்த கிளையில் இருந்தும் தகவல்களை எடுக்க முடியாது என்றும், வாடிக்கையாளர்களின் அனைத்து தகவல்களும் பாதுகாப்பாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளது

News Counter: 
100
Loading...

aravind