மாநில அரசு டிஜிபிக்களை நியமிக்க முடியாது..உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!

share on:
Classic

மாநில அரசுகள் தன்னிச்சையாக டிஜிபிக்களை நியமிக்க முடியாது என்றும் யுபிஎஸ்சி மட்டுமே டிஜிபிக்களை நியமிக்கமுடியும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

நாடு முழுவதும் டிஜிபி நியமனம் தொடர்பாக பல்வேறு விதிமுறைகளை உச்சநீதிமன்றம் வகுத்தது. அதில் டிஜிபிக்கு தகுதியான மூத்த ஐபிஎஸ் அதிகாரிகளைதான் மாநில அரசுகள் நியமனம் செய்ய வேண்டும் என்றும் இடைக் கால டிஜிபியாக யாரையும் பதவியில் அமர்த்தக் கூடாது என்றும் கடந்த ஆண்டு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதையடுத்து டிஜிபி நியமனத்தில் விதிக்கப்பட்ட தடைகளை தளர்த்தக் கோரி, தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்கள் வழக்கு தொடர்ந்தன. இதில் அனைத்து தரப்பு வாதங்களையும் விசாரித்த தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு இன்று தீர்ப்பு வழங்கியது. 

அதில், ஓய்வுப் பெற 6 மாதக் காலம் இருந்தாலும் பணிமூப்பு அடிப்படையில் டிஜிபியாக நியமிக்கலாம் என்று உத்தரவிட்டுள்ளது. ஓய்வுபெற இரண்டு ஆண்டுகள் இருந்தால்தான் டிஜிபியை நியமிக்கலாம் என்ற விதியை தளர்த்தி உச்சநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. மாநில அரசு டிஜிபிக்களை சுயமாக நியமிக்க முடியாது என்றும் யுபிஎஸ்சி மட்டுமே டிஜிபிக்களை நியமிக்க முடியும் என்றும் உச்சநீதிமன்றம் அதில் குறிப்பிட்டுள்ளது.

 

News Counter: 
100
Loading...

sajeev