"அனைத்து மாசுவிற்கும் ஸ்டெர்லைட் ஆலையை பொறுப்பாக்க முடியாது"

share on:
Classic

தூத்துக்குடியில் ஏற்பட்டுள்ள அனைத்து மாசுவிற்கும் ஸ்டெர்லைட் ஆலை பொறுப்பாகாது என வேதாந்த நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதி கோரி வேதாந்தா நிறுவனம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து நீதிமன்றத்தில், அந்நிறுவனத்தின் சார்பில் 5-ம் நாள் வாதம் இன்று முன்வைக்கப்பட்டது. அதில், தூத்துக்குடியில் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டது தொடர்பான எந்த ஆதாரங்களும் அரசு இதுவரை சமர்பிக்கவில்லை எனவும், தூத்துகுடியில் அதிக மாசு ஏற்படுத்திபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டுமென்றால், அப்பகுதியில் உள்ள அனல் மின் நிலையங்கள் மீதுதான் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது. ஸ்டெர்லைட் ஆலையால் மட்டும் தான் மாசு ஏற்படுகிறது என்று கூறுவதை ஏற்க முடியாது எனவும் தெரிவித்தது.

 

News Counter: 
100
Loading...

aravind