அரசு அடக்குமுறையை கடைபிடித்தால் போராட்டம் தொடரும்..ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள் எச்சரிக்கை..!

share on:
Classic

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடியவர்கள் மீது அரசு அடக்குமுறை கடைபிடித்தால் போராட்டம் தொடரும் என ஸ்டெர்லைட் எதிர்ப்பு குழு அறிவித்துள்ளது.

கடந்த ஆண்டு மே 22ஆம் தேதி தூத்துக்குடியில் செயல்பட்டு வந்த ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடியவர்கள் மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியது. இதில் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் நடைபெற்று நாளையுடன் ஓராண்டு நிறைவு பெறுகிறது. இந்நிலையில் துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களுக்கு நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்த ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பாளர்கள் தரப்பில் பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. 

ஆனால் இதனை தடுக்கும் வகையில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடியவர்கள் மீது அரசு இந்திய குற்றவியல் நடைமுறை சட்டப்படி 107 சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பாளர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும் அரசு அடக்குமுறை கடைபிடித்தால் போராட்டம் தொடரும் எனவும் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

 

News Counter: 
100
Loading...

aravind