பாதாளத்தில் விழுந்தது பங்குச்சந்தை...!

share on:
Classic

இந்திய பங்குச்சந்தையின் இன்றைய வர்த்தகம் பெரும் சரிவுடன் முடிவடைந்தது. 

இன்றைய வர்த்தகம்:
மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 572 புள்ளிகள் சரிவைக் கண்டு 35,312 புள்ளிகளில் வர்த்தகம் முடிவடைந்தது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 181 புள்ளிகள் சரிந்து 10,601 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது. 

லாபம் & நஷ்டம்:
நிஃப்டி50-யில் வர்த்தகமான 50 நிறுவன பங்குகளில் 4 பங்குகள் மட்டுமே ஏற்றம் கண்டன. மீதமுள்ள 45 நிறுவன பங்குகளும் சரிவையே சந்தித்தன. மும்பை பங்குச்சந்தையில் 745 பங்குகளின் மதிப்பு ஏற்றத்தையும், 1,778 பங்குகள் மதிப்பு சரிவையும் சந்தித்த அதே நேரம் 150 பங்குகள் மதிப்பு எவ்வித மாற்றமும் இன்றி வர்த்தகம் முடிந்தது. சென்செக்ஸில் மாருதி சுஸுகி, டாடா மோட்டார்ஸ், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் அதானி போர்ட்ஸ் உள்ளிட்ட ஜாம்பவான் நிறுவனங்களின் பங்குகளுக்கு இன்று பெரிய அடி விழுந்தது. மறுபுறம், நிஃப்டியில் சன் ஃபார்மா, ஜே.எஸ்.டபுள்யூ.ஸ்டீல், கெயில், பவர்கிரிட் நிறுவன பங்குகள் லாபத்தையும், மாருதி, பஜாஜ் ஃபின், டெக் மஹேந்திரா, டாடா மோட்டார்ஸ் நிறுவன பங்குகள் நஷ்டத்தையும் சந்தித்தன. 

கச்சா எண்ணெய் விலை:
பெட்ரோல்-டீசல் விலையேற்றத்திற்கு அடிப்படைக் காரணமாக திகழும் கச்சா எண்ணெயின் விலை இன்று குறைந்தவாறே வர்த்தகம் ஆனது. பிரெண்ட் கச்சா எண்ணெய் பேரல் ஒன்றுக்கு  $61 அளவு வர்த்தகமானதாக சவுதி அமைச்சர் அறிவித்ததே கச்சா எண்ணெய் விலையில் சரிவு ஏற்பட காரணமாக அமைந்திருந்தது

 

News Counter: 
100
Loading...

mayakumar