ஊதிய உயர்வு கோரி தொடரும் பெஸ்ட் போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தம்...

share on:
Classic

மும்பையில் ஐந்தாவது நாளாக பெஸ்ட் அரசு போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்தம் தொடர்கிறது

மும்பையில் நஷ்டத்தில் இயங்கும் பெஸ்ட் குழுமத்தில் பணிபுரிந்து வரும் 32,000 ஊழியர்களின் சம்பள உயர்வு, பெஸ்ட் குழுமத்தை மாநகராட்சியுடன் இணைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்த போராட்டம் நடைபெற்று வருகிறது. கடந்த 7ம் தேதி நள்ளிரவு முதல் போராட்டம் தொடர்ந்து வரும் நிலையில், நேற்று தொழிற்சங்க ஊழியர்களுடன் அரசு நடத்திய பேச்சுவார்த்தையும் தோல்வியில் நிறைவடைந்தது. இதனைத் தொடர்ந்து, 5வது நாளாக தொடரும் வேலைநிறுத்தத்தால்,  மும்பையின் பெருநகரத்தின் பேருந்து சேவை முடங்கியுள்ளது. முறையாக பேருந்து கிடைக்காமல் பயணிகள் பரிதவித்து வருகின்றனர். மேலும் இதனை பயன்படுத்தி டாக்ஸி, ஆட்டோ ஓட்டுநர்கள் அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார் எழுந்துள்ளது

News Counter: 
100
Loading...

aravind