தான் இறந்துவிட்டதாக லீவ் லெட்டர் அளித்த மாணவன் - ஒப்புதல் வழங்கிய பள்ளி முதல்வர்..!!

share on:
Classic

நான் இறந்துவிட்டேன் எனக்கு விடுப்பு தாருங்கள் என்று கூறி மானவன் அளித்த லீவ் லெட்டருக்கு பள்ளி முதல்வர் விடுப்பு வழங்கியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

உத்திரபிரதேசம் கான்பூரில் உள்ள பள்ளி ஒன்றில் 8 ஆம் வகுப்பு மாணவர் ஒருவர் விடுமுறைக்காக விடுப்பு விண்ணப்பத்தை பள்ளி முதல்வரிடம் அளித்துள்ளார். அதில் நான் இறந்துவிட்டதால் எனக்கு அரை நாள் விடுப்பு அளியுங்கள் என குறிப்பிட்டுள்ளார். ஆனால் உன்மையில் இறந்தது அவரது பாட்டி தான் என கூறப்படுகிறது. பாட்டி இறந்ததாக விடுப்பு கோருவதற்கு பதில் தான் இறந்துவிட்டதாக தவறுதலாக லீவ் லெட்டர் அளித்துள்ளார். ஆனால் அந்த தவறை கவனிக்காமல் பள்ளி முதல்வர் அந்த லீவ் லெட்டருக்கு ஒப்புதழ் வழங்கியுள்ளார். இந்த லீவ் லெட்டர் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

News Counter: 
100
Loading...

Thaamarai Kannan