மாணவர்கள் தர்ணா போராட்டம்..!

share on:
Classic

ஆசிரியரை பணியிட மாற்றம் செய்யக் கூடாது எனக் கோரி மாணவ, மாணவிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு நெசவாளர் காலனி நகராட்சி நடுநிலைப் பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணியாற்றி வந்தவர் பார்த்திபன். இவர் ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் ஈடுபட்டதால் வேறு பள்ளிக்கு மாற்றம் செய்யப்பட்டார். ஆசிரியர் இடமாற்றம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அவர் அதே பள்ளியில் தொடர வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தியும் மாணவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆசிரியர் பார்த்திபன் தங்களுக்கு பல உதவிகளை செய்துள்ளதாகவும் கூறி மாணவர்கள் கதறி அழுதது காண்போருக்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை தொடர்ந்து போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.

News Counter: 
100
Loading...

vinoth