கல்வி கற்றால் மட்டுமே மாணவர்கள் வெல்ல முடியும் - அமைச்சர் தங்கமணி

share on:
Classic

கல்வி கற்றால் மட்டுமே தற்போதைய உலக போட்டியில் மாணவர்கள் வெல்ல முடியும் என மின் துறை அமைச்சர் தங்கமணி கூறியுள்ளார்.

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரில்  பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடைபெற்ற விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழாவில், 2 ஆயிரத்து 674 மாணவர்களுக்கு மிதி வண்டிகள் வழங்கப்பட்டது. அப்போது பேசிய மின் துறை அமைச்சர் தங்கமணி, கல்வி கற்றால் மட்டுமே தற்போதைய உலக போட்டியில் மாணவர்கள் வெல்ல முடியும் என்று கூறினார். மேலும், இந்நிகழ்ச்சியில்  சமூகநலன் மற்றும் சத்துணவுத் திட்டத்துறை அமைச்சா் .வெ.சரோஜாவும் கலந்து கொண்டார்

News Counter: 
100
Loading...

vijay