ராகிங் கொடுமையால் 2 மாணவர்கள் பலி..மதுரையில் அதிர்ச்சி சம்பவம்..!

share on:
Classic

மதுரையில் கல்லூரி மாணவர்களின் ராகிங் கொடுமையால் 2 பேர் பலியாகியுள்ள சம்பவம் மாணவர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மதுரை தெப்பக்குளம் பகுதியில் அமைந்துள்ள தனியார் கல்லூரியில் பரத், முத்துப்பாண்டி, ஜெய்சக்தி என்ற மூன்று மாணவர்களும் முதலாம் ஆண்டு படித்து வந்தனர். இதில், ஜெய்சக்தி என்ற மாணவர் பரத் மற்றும் முத்துப்பாண்டி இருவரையும் தினமும் ராகிங் செய்து வந்துள்ளார். இதனால், மனம் உடைந்த இருவரும் மார்ச் 2-ம் தேதி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றனர். 

இதையறிந்த பெற்றோர்கள், அவர்களை மீட்டு மதுரை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதித்தனர். இதில், மாணவர் பரத் 4 நாட்களுக்கு முன்பு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரைத் தொடர்ந்து, மாணவர் முத்துப்பாண்டியும் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மாணவர்களை ராகிங் செய்து, அவர்களின் தற்கொலைக்கு காரணமான மாணவர் ஜெய்சக்தியை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

 

News Counter: 
100
Loading...

sajeev