இந்திய மாணவர் சங்கத்தினர் புதிய கல்விக்கொள்கைக்கு எதிர்ப்பு..!!

share on:
Classic

சென்னையில் இந்திய மாணவர் சங்கத்தினர் மத்திய அரசின் புதிய கல்விக்கொள்கை வரைவு நகலை எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மத்திய அரசு வெளியிட்ட தேசிய புதிய கல்விக் கொள்கைக்கு தமிழகத்தில் பெரிய அளவில் எதிர்ப்புகள் எழுந்துள்ளன. இந்நிலையில், இந்திய மாணவர் சங்கத்தினர் மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை பல்கலைக்கழக வளாகம் முன்பு புதிய கல்விக் கொள்கையின் வரைவு நகலை எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாணவர்கள் புதிய கல்விக்கொள்கை பழைய குலக்கல்வி திட்டத்தை கொண்டுவரும் முயற்சி என்று குற்றம் சாட்டி முழக்கமிட்டனர்.  ஆர்ப்பட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்து அழைத்துச் சென்றனர்.

News Counter: 
100
Loading...

Thaamarai Kannan