இந்திய தோல்வி குறித்து சுப்ரமணிய சுவாமி சர்ச்சை ட்வீட்..!

share on:
Classic

இந்திய - நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான அரையிறுதி போட்டியில் இந்தியா தோல்வியடைந்து உலகக்கோப்பையில் இருந்து வெளியேறியது. இந்நிலையில் இந்த தோல்விக்கு இங்கிலாந்து அரசே காரணம் என சுப்ரமணிய சுவாமி குற்றம் சாட்டியுள்ளார்.

ஜீலை 9-ஆம் தேதி மான்செஸ்டர் மைதானத்தில் இந்திய - நியூசிலாந்து அணிகள் இடையேயான அரையிறுதி போட்டியில் பங்கேற்றன. மழையின் காரணமாக அன்றைய நாள் ஆட்டம் ரத்து செய்யப்பட்டு அடுத்து நாளுக்கு ஒத்திவைக்கப்பட்டது. முதலில் ஆடிய நியூசிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழந்து 239 ரன்கள் சேர்த்து தனது இன்னிங்ஸை நிறைவு செய்தது. 240 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கிய இந்திய அணி 49.3 ஓவரில் இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 221 ரன்கள் மட்டுமே சேர்த்தது. 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த இந்திய அணி அரையிறுதி வாய்ப்பை இழந்தது. இந்த தோல்வி குறித்து பாஜக மாநிலங்களவை உறுப்பினர் சுப்ரமணிய சுவாமி சர்ச்சை ஏற்படுத்தும் வகையில் ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார். 

அதில் அவர் கூறியிறுப்பதாவது 

கிரிக்கெட்டுக்கான ஐ.சி.சி ஏன் லண்டனில் இருக்க வேண்டும்? வெள்ளைக்காரர் கடினமான சீனிவாசனிலிருந்து நீக்கி விட்டு, எலும்பில்லாத அதிசய இந்தியரை தலைவராக அமர்த்தியுள்ளனர். இங்கிலாந்தில் மழை வர வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. மழை பெய்யவில்லை என்றால் அதே நாளில் இந்தியா வென்றிருக்கும் என தெரிவித்திருந்தார்.

News Counter: 
100
Loading...

Saravanan