ஆப்கானிஸ்தானில் தற்கொலைப்படை தாக்குதல் : ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்பு..

share on:
Classic

ஆப்கானிஸ்தானில் நடைபெற்ற தற்கொலைப்படை தாக்குதலுக்கு ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. 

கடந்த சில மாதங்களில் ஆப்கனில் தொடர் வன்முறை சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. கடந்த மே மாதம் மட்டும் 3 குண்டுவெடிப்பு சம்பவங்கள் ஜலால்பாத் பகுதியில் நடைபெற்றன. இதே போல் கடந்த மார்ச் மாதம் விமானநிலையம் அருகே நடைபெற்ற தாக்குதலில் 16 பேர் உயிரிழந்தனர். 

இந்நிலையில், ஆப்கானிஸ்தான் நாட்டின் ஜலால்பாத் நகரத்தில், நேற்று காவல்துறை சோதனைசாவடி மீது தற்கொலை படையினர் தாக்குதல் நடத்தினர். இதில் ஒரு குழந்தை உட்பர 11 பேர் உயிரிந்தனர், 13 பேர் காயமடைந்தனர். இந்த தாக்குதலுக்கு ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்றுள்ளதாக, நங்கர்கர் மாகாணத்தின் ஆளுநரின் செய்தித்தொடர்பாளர் அத்துல்லா கோஹ்யானி தெரிவித்தார். 

 

News Counter: 
100
Loading...

Ramya