திருமண விழாவில் தற்கொலைப் படை தாக்குதல் : 5 பேர் உயிரிழப்பு..

share on:
Classic

ஆப்கானிஸ்தானில் திருமண விழாவில் நடைபெற்ற தற்கொலைப்படை தாக்குதலில் 5 பேர் உயிரிழந்தனர், 40-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். 

ஆப்கானிஸ்தானின் கிழக்கு மாகாணப் பகுதியான நங்கர்ஹர் என்ற இடத்தில் இன்று காலை 8.30 மணியளவில் இந்த தாக்குதல் நடைபெற்றுள்ளது. திருமண விழாவில் கலந்து கொண்ட தற்கொலைப் படையை சேர்ந்த நபர் ஒருவர் தன்னை தானே வெடிக்க செய்ததில் 5 பேர் உயிரிழந்தனர், 40-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் நங்கர்ஹர் நகரத்தில் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். 

முன்னதாக ஆப்கானிஸ்தானின் அமைதியை நிலைநாட்ட அமெரிக்க மேற்கொள்ளும் முயற்சியின் ஒரு பகுதியாக, ஆப்கன் அரசு பிரதிநிதிகள், தாலிபான்கள் இடையே பேச்சுவார்த்தை அண்மையில் நடைபெற்றது. அதன் பின்னர் இந்த தற்கொலைப்படை தாக்குதல் சம்பவம் அரங்கேறியுள்ளது. தோஹாவில் நடைபெற்ற இரண்டு நாள் உச்சி மாநாட்டில், பொதுமக்களின் உயிரிழப்புகளை முற்றிலும் குறைக்கும் வகையில் அமைதிக்கான பாதை என்ற உறுதிமொழியும் கூட்டாக எடுக்கப்பட்டது. மேலும் அமெரிக்காவின் அமைதி தூதரான சல்மாய் கலீல்சாத் மற்றும் தாலிபான்களுக்கு இடையே நேரடிப் பேச்சுவார்த்தையும் கடந்த வாரம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. 

 

News Counter: 
100
Loading...

Ramya