கொளுத்தி வரும் கோடை வெயில்..தகிக்கும் தமிழகம்..!

share on:
Classic

கொளுத்தி வரும் கோடை வெயில் தமிழகத்தின் 12 நகரங்களில் சதமடித்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

கடலூர், தருமபுரி, சேலம், கரூர், மதுரை, நாமக்கல் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் வெயில் சதமடித்துள்ளது. அதிகபட்சமாக கரூரில் 109.4 டிகிரி பாரன்ஹுட்டும், திருத்தணியில் 108.5 டிகிரி பாரன்ஹுட்டும், வேலூரில் 106.8 டிகிரி பாரன்ஹுட்டும் வெப்பநிலை பதிவாகி இருக்கிறது. 

உள் தமிழகத்தின் ஓரிரு இடங்களில் இன்று வெப்பம் அதிகரித்து அனல் காற்று வீசும் என்று கூறப்பட்டுள்ளதால், மக்கள் காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை பாதுகாப்பாக பயணிக்கவும், பயணங்களை தவிர்த்து கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழக உள் மாவட்டங்களில் வெப்பச்சலனம் காரணமாக ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

News Counter: 
100
Loading...

aravind