சந்திர கிரகணத்துடன் கூடிய ‘சூப்பர் ப்ளட் மூன்’ அதிசயம்...எப்போது?

Classic

வரும் ஜனவரி 20ம் தேதி சந்திர கிரகணத்துடன் கூடிய ‘சூப்பர் ப்ளட் மூன்’ என்ற அதிசயம் நிகழ உள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

சூரியனுக்கும் நிலவுக்கும் நடுவில் பூமியானது பயணிக்கும் போது, சூரியனில் இருந்து நிலவுக்கு கிடைக்கும் ஒளி தடைப்பட்டு, பூமியின் நிழலானது நிலவின் மீது விழும். அப்போது நிலா சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கும். இதனை ‘ப்ளட் மூன்’ என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இந்திய நேரப்படி ஜனவரி 20ந் தேதி நள்ளிரவு 11 மணிக்கு தொடங்கி அடுத்த நாள் காலை வரை இது நீடிக்கும் என தெரிவித்துள்ளனர். இந்த சந்திர கிரகணம் அமெரிக்கா, கிரீன்லாந்து, ஐஸ்லாந்து, மேற்கு ஐரோப்பா, மேற்கு ஆப்ரிக்கா போன்ற நாட்டு மக்களால் தெளிவாகக் காண முடியும் என கூறப்படுகிறது.

News Counter: 
100
Loading...

aravind