இன்று பூமிக்கு மிக அருகில் வருகிறது நிலவு

share on:
Classic

பூமிக்கு மிக அருகில் நிலவு வரும் நிகழ்வான 'சூப்பர் மூன்' (Super Moon) இன்று நடைபெறுகிறது. சராசரியை விட இன்று நிலவு மிக பெரிதாகவும், ஒளிமயமாகவும் இருக்கும் என்று கூறப்படுகிறது.

பூமிக்கு மிக அருகில் நிலவு  வரும் இந்த நிகழ்விற்கு சூப்பர் நிலவு, பனி நிலவு மற்றும் பசி நிலவு என பல பெயர்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த வருடம் மட்டுமே இந்த நிகழ்வு மூன்று முறை நடக்கும். கடந்த ஜனவரி மாதம் ஏற்கனவே ஒரு முறை நடந்தது திரும்ப இன்றும், மார்ச் 21 அன்றும் நடக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்த வருடத்தின் இரண்டாவது நிகழ்வான இன்று கடந்த ஜனவரியில் வந்ததை விட 583 கி.மீ பூமிக்கு அருகில் நிலவு வரும் என்று கூறப்படுகிறது.

குளிர் காலத்தில் தோன்றும் இரண்டாவது சூப்பர் நிலவுக்கு மட்டுமே 'பனி நிலவு' என்று பெயர். இந்த பெயர் அமெரிக்காவின் பழங்குடியின மக்களிடம் இருந்து வந்திருக்கலாம் என்று நாசா கருதுகிறது. கடுமையான பனி காலங்களில் தோன்றும் இந்த நிலவிற்கு 'பசி நிலவு' என்று வேறொரு பெயரும் உண்டு. கடைசியாக இந்த அழகிய பெரிய நிலவினை நீங்கள் இந்திய நேரப்படி இன்று இரவு 9:30 க்கு கண்டு களிக்கலாம்.  
 

News Counter: 
100
Loading...

priya