இளைய திலகத்தை நேரில் சந்தித்த சூப்பர்ஸ்டார்...இதுதான் காரணம்!!!

share on:
Classic

நடிகர் பிரவுவை சந்தித்து , தன் மகள் செளந்தர்யாவின் திருமண அழைப்பிதழ் வழங்கினார் ரஜினிகாந்த்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இளைய மகள் சௌந்தர்யாவின் 2-வது திருமணம் பிப்ரவரி 11-ம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது. சௌந்தர்யா- அஸ்வின் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து முறையாக விவாகரத்து பெற்று கொண்டனர். பின்னர், தொழிலதிபர் வணங்காமுடியின் மகனும் நடிகருமான விசாகன் என்பவரை இவர் திருமணம் செய்ய உள்ளார். இதற்கான ஏற்பாடுகள் மும்மரமாக நடைபெற்று கொண்டிருக்கும் வேலையில், ரஜினிகாந்த்  திரை பிரபலங்கள் மற்றும் அரசியல் பிரமுகர்களை நேரில் சந்தித்து திருமண அழைப்பிதழை வழங்கி வருகிறார். இந்நிலையில், இவர் இளைய திலகம் பிரபு அவர்களின் வீட்டிற்கு நேரில் சென்று அவருடைய மகள் திருமணத்திற்கான அழைப்பிதழை வழங்கினார். அப்போது பிரபுவின் மகன் விக்ரம் பிரபு உடன் ரஜினிகாந்த் புகைப்படம் எடுத்துக்கொண்டார். அந்த புகைப்படம் தற்போது இணையதளத்தில் அனைவராலும் பகிரப்பட்டு வருகிறது.

News Counter: 
100
Loading...

aravind