பேட்ட படத்துக்கு கிடைத்த வரவேற்புக்கு ரஜினிகாந்த் நன்றி

share on:
Classic

பொங்கல் விருந்தாக ரிலீஸாகியுள்ள 'பேட்ட' படம் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை முற்றிலுமாக பூர்த்தி செய்துள்ளது. 

சூப்பர்ஸ்டார் ரசிகர்களின் வெறித்தனமான எதிர்பார்ப்போடு வெளியாகி இருக்கும் படம் தான் பேட்ட. இந்த படம் இப்படி இருக்குமோ? அல்லது அப்படி இருக்குமோ? என பல்வேறு எதிர்பார்ப்புகளோடு திரையரங்குகளுக்கு சென்ற அனைவருக்குமே காத்திருந்தது இன்ப அதிர்ச்சி. ஏனென்றால், ரஜினியை இதற்கு முன்பு யாரும் பார்த்திடாத புதிய பரிமாணத்தில் செதுக்கி காட்டியுள்ளார் இளம் இயக்குனர் கார்த்திக் சுப்பாராஜ். படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் ரஜினியிஸம் தெறிக்கும் வகையில் திரைக்கதையும் கதாபாத்திரங்களின் வடிவமைப்பும் இடம்பெற்றுள்ளன. 

ரஜினியை மாஸ் லுக்குடன் ரசிகர்களிடம் கொண்டு சேர்க்கும் முயற்சியில் கார்த்திக் சுப்பாராஜ் வெற்றி பெற்றுள்ளார். இந்நிலையில் கடந்த சில வாரங்களாக அமெரிக்காவில் ஓய்வில் இருந்த ரஜினிகாந்த், சென்னை திரும்பிய பின், போயஸ்கார்டனில் உள்ள அவரது இல்லத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் எல்லோருக்கும் பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்தார். பேட்ட படத்துக்கு கிடைத்த வரவேற்பு, பெருமையெல்லாம் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் மற்றும் சன் பிக்சர்ஸூக்கே சேரும் என தெரிவித்தார்.

News Counter: 
100
Loading...

sasikanth