BS IV ரக வாகனங்களை விற்க, பதிவு தடை..!

Classic

2020 ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் தேதிக்கு பின்னர் பிஎஸ் 4 வகை வாகனங்களை விற்பனை செய்ய உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.

வாகன புகை உமிழ்வு விதி திட்டத்தின் படி பிஎஸ், 3, 4 என அடுத்தடுத்து விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன. தற்போது பிஎஸ் 4 விதிமுறைகள் பின்பற்றப்பட்டு வருகின்றன. இந்த விதிமுறைப்படி வாகனங்களை தயாரிக்க, 2020 ஆம் ஆண்டு ஜுன் வரை வாகன தயாரிப்பு நிறுவனங்களுக்கு அனுமதி வழங்க மத்திய அரசு முடிவு செய்தது.

இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், உச்ச நீதிமன்றம் புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது. 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் தேதிக்கு பின்னர் பிஎஸ் 4 ரக வாகனங்களை விற்கவும், பதிவு செய்யவும் தடை விதித்துள்ளது.

 

News Counter: 
100
Loading...

aravind