வாழ்நாள் தடை நீக்கம்..ஸ்ரீசாந்த் ஹேப்பி.?

share on:
Classic

இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த் கிரிக்கெட் விளையாட விதிக்கப்பட்டிருந்த வாழ்நாள் தடையை உச்ச நீதிமன்றம் நீக்கியுள்ளது

20013ம் ஆண்டு நடைபெற்ற ஐ.பி.எல். தொடரில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக பிசிசிஐ ஸ்ரீசாந்திற்கு வாழ்நாள் தடை விதித்தது. இந்நிலையில் , 2015ம் ஆண்டு ஸ்ரீசாந்த் உள்ளிட்ட 36 பேரை சூதாட்ட வழக்கில் இருந்து டெல்லி உயர் நீதிமன்றம் விடுவித்தது. பின்னர் தனக்கு விதிக்கபப்ட்ட வாழ்நாள் தடையை எதிர்த்து கேரள உயர் நீதிமன்றத்தில் ஸ்ரீசாந்த் வழக்கு தொடர்ந்தார்.

இதனைத் தொடர்ந்து, சூதாட்டத்தில் ஈடுபட்டதற்கான ஆதாரங்கள் இல்லாததால், ஸ்ரீசாந்த் மீதான வாழ்நாள் தடையை நீக்குவதாக கேரள உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து பிசிசிஐ, கேரள உயர் நீதிமன்றத்தின் டிவிசன் பென்சில் மேல்முறையீடு செய்தது. இதனை விசாரித்த தலைமை நீதிபதி நவ்நிதி பிரசாந்த் தலைமையிலான அமர்வு, பிசிசிஐ விதித்த ஆயுட்கால தடை தொடரும் என உத்தரவிட்டது.

கேரள உயர் நீதிமன்றத்தில் அதிரடி உத்தரவை எதித்து, இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த் மீது விதிக்கப்பட்ட வாழ்நாள் தடையை நீக்கியது. மேலும்,  கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவது குறித்து ஸ்ரீசாந்த் அளித்த மனு மீது 3 மாதத்திற்குள் முடிவு எடுக்கவும் பிசிசிஐக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

 

News Counter: 
100
Loading...

sajeev