தினகரனுக்கு குக்கர் சின்னம் மறுப்பு - உச்ச நீதிமன்றம்

share on:
Classic

அ.ம.மு.க.வுக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்கக்கோரி தினகரன் தொடர்ந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.

இந்த வழக்கில், குக்கர் சின்னத்தை ஒதுக்க மறுத்த நீதிமன்றம், இது குறித்து தேர்தல் ஆணையம் 4 வாரத்திற்குள் முடிவெடுக்க உத்தரவிட்டது. டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கையும் 4 வாரத்துக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. அங்கீகரிக்கப்படாத கட்சி என்பதால் அமமுகவுக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்க முடியாது என ஏற்கனவே தேர்தல் ஆணையம் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
 

News Counter: 
100
Loading...

vinoth