ரிசர்வ் வங்கியின் கடன் தீர்மானம் குறித்த சுற்றறிக்கை : உச்சநீதிமன்றம் ரத்து செய்து உத்தரவு

share on:
Classic

கடந்த பிப்ரவரி 12-ம் தேதி ரிசர்வ் வங்கி வெளியிட்ட சுற்றறிக்கையை உச்சநீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

வங்கிகளில் தேங்கியுள்ள கடன் குவிப்பை கட்டுப்படுத்தும் விதமாக ரிசர்வ் வங்கி கடந்த பிப்ரவரி 12-ம் தேதி ஒரு சுற்றறிக்கை வெளியிட்டது. அதில் பவர், சர்க்கரை, டெக்ஸ்டைல் உள்ளிட்ட தொழில் நிறுவனங்கள் தாங்கள் வாங்கிய கடன் தொகையை 180 நாட்களுக்கு செலுத்தவில்லை என்றால் அந்த நிறுவனங்களை திவாலாக்கும் நடவடிக்கையை ரிசர்வ் வங்கி மேற்கொள்ளும் என்று கூறப்பட்டிருந்தது. இந்த கால அவகாசம் தங்களுக்கு போதாது எனவும், இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றம் தலையிட வேண்டும் என்றும் பல்வேறு நிறுவனங்கள் சார்பில் வழக்கு தொடரப்பட்டிருந்தன. இந்த வழக்கை இன்று விசாரித்த உச்சநீதிமன்றம் ரிசர்வ வங்கியின் உத்தரவை ரத்து செய்து தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பு 75-க்கும் மேற்பட்ட தொழில் நிறுவனங்களுக்கு மிகப்பெரிய உதவியாக இருக்கும். 

News Counter: 
100
Loading...

Ramya