மாநிலங்களவையில் உள்ள காலி இடங்களுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தக் கோரிய வழக்கு தள்ளுபடி..!

share on:
Classic

மாநிலங்களவையில் உள்ள காலி இடங்களுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தக் கோரிய வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. 

மாநிலங்களவை உறுப்பினர்களாக இருந்த, அமித் ஷா, ஸ்மிருதி ராணி ஆகியோர் மக்களவை தேர்தலில் வெற்றி பெற்றனர். இதனால், குஜராத்தில் இரண்டு மாநிலங்களவை இடங்கள் காலியானது. குஜராத்தில் காலியான இந்த மாநிலங்களவை இடங்களுக்கு ஜூலை 5ம் தேதி தனித்தனியே இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.

 இதற்கு எதிர்ப்பு தெரிவித்து குஜராத் காங்கிரஸ் எம்எல்ஏ பரேஷ்பாய் தனானி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கை முன்னதாக விசாரித்த உச்சநீதிமன்றம், மாநிலங்களவையில் காலியாக இருக்கும் இடங்களுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது தொடர்பாக பதிலளிக்குமாறு தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமனறம் உத்தரவிட்டது. 

மாநிலங்களவையில் காலியாக இருக்கும் இடங்களுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வேண்டிய அவசியம் இல்லை என தேர்தல் ஆணையம் இது குறித்து பதிலளித்தது. இந்தநிலையில், இந்த வழக்கு மீண்டும் இன்று விசாரணைக்கு வந்தபோது, இவ்வழக்ககை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மேலும், இது தொடர்பாக தேர்தல் ஆணையத்தை அணுகவும் மனுதாரருக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

 

News Counter: 
100
Loading...

aravind