கர்நாடகா அதிருப்தி MLA-கள் ராஜினாமா வழக்கில் இன்று தீர்ப்பு..!

share on:
Classic

கர்நாடகா அதிருப்தி எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமா விவகாரம் தொடர்பான வழக்குகளில், உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது.

ராஜினாமா கடிதம் மீது முடிவு எடுக்க சபாநாயகர் காலம் தாழ்த்துவதாக, கர்நாடகா அதிருப்தி எம்.எல்.ஏக்களும், சபாநாயகருக்கு உத்தரவிட நீதிமன்றத்துக்கு அதிகாரமில்லை என கர்நாடக சபாநாயகர் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்குகள் நேற்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீட்பதிகள், இன்று தீர்ப்பு வழங்கப்படும் என அறிவித்தனர். 

கர்நாடக அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு வரும் 18 ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில், இன்று வெளியாக உள்ள தீர்ப்பு, கர்நாடகாவில் காங்கிரஸ் - மதசார்பற்ற ஜனதா தளம் கூட்டணி ஆட்சி நீடிக்குமா அல்லது கவிழுமா என்பதை நிர்ணயிப்பதாக உள்ளது.

 

News Counter: 
100
Loading...

aravind