தாமிரபரணி தண்ணீரை தொழிற்சாலைகள் எடுக்க தடை

share on:
Classic

தூத்துக்குடி அனல் மின் நிலையம், குடிநீர் தேவை தவிர தாமிரபரணி தண்ணீரை தொழிற்சாலைகள் எடுக்க உச்ச நீதிமன்றம்  தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் 46,107 ஏக்கர் விவசாய நிலம் தாமிரபரணி ஆற்றின் மூலமாக பாசன வசதி பெற்று வருகின்றன. இதேபோல் தாமிரபரணி ஆற்றின் குடிதண்ணீரை நம்பி லட்சக்கணக்கான மக்கள் உள்ளனர். இந்நிலையில் ஸ்ரீவைகுண்டம் அணையின் உட்பகுதியில் இருந்து தூத்துக்குடியில் உள்ள 21 தொழிற்சாலைகளுக்கு நாள்தோறும் 9,20,00,000 லிட்டர் தாமிரபரணி ஆற்றின் தண்ணீரை எடுத்து வழங்கும் திட்டம் 2011-ம் ஆண்டு நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டது.

இதை எதிர்த்து தி.மு.க. மாநில இளைஞர் அணி துணை செயலாளர் ஜோயல், தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த தேசிய பசுமை தீர்ப்பாயம் ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டில் இருந்து எந்த தொழிற்சாலைக்கும் தாமிரபரணி தண்ணீரை வழங்க கூடாது என்றும், அணையில் இருந்து எடுக்கப்படும் தண்ணீரை பொதுமக்களின் குடிநீர் தேவைக்கு மட்டுமே வழங்க வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்தது.

News Counter: 
100
Loading...

aravind