மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய கோரிய வழக்கில் நாளை விசாரணை

share on:
Classic

மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய கோரிய வழக்கை உச்சநீதிமன்றம் நாளை விசாரிக்க உள்ளது. 

மேற்குவங்கத்தில் மருத்துவர்கள் தாக்கப்பட்டதை தொடர்ந்து, நாட்டில் உள்ள பல்வேறு பகுதிகளில், மருத்துவர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட தொடங்கினர். இதற்கிடையே மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய கோரி கடந்த வெள்ளிக்கிழமை உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஸ்ரீவஸ்தவா மனு தாக்கல் செய்தார். இந்த மனுவில், நாடு முழுவதும் உள்ள அனைத்து மருத்துமனைகளிலும், அரசு சார்பில் பாதுகாப்பு அதிகாரிகளை நியமிக்க மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் இன்று கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை ஏற்ற உச்சநீதிமன்றத்தின் விடுமுறை கால அமர்வு, இந்த வழக்கு நாளை விசாரிக்கப்படும் என தெரிவித்துள்ளது.

 

News Counter: 
100
Loading...

vinoth